பசுமை வாசல் மற்றும் மனிதநேய மக்கள் அறக்கட்டளை சார்பில் ஆசிரியை பணிக்கு அர்ப்பணிப்பு உணர்வோடு சிறப்பாக செய்தமைக்காக எங்கள் கல்லூரியின் தமிழ்த்துறை தலைவராக உள்ள முனைவர் வே.சுலோச்சனா அவர்களுக்கு கல்விச்செம்மல் விருது வழங்கப்பட்டது.

முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களது பிறந்தநாளை முன்னிட்டு பசுமை வாசல் பவுண்டேஷன், காருண்யம் டிரஸ்ட், ஒளிச்சுடர் சேவா டிரஸ்ட் ஆகியவை இணைந்து நடத்திய பன்முகத் கலைஞர்களுக்கான விருது வழங்கும் விழாவில் ஆசிரியர் பிரிவில் எங்கள் கல்லூரியின் தமிழ்த்துறை தலைவர் முனைவர் வே.சுலோச்சனா அவர்கள் கலைஞரின் முத்தமிழ் விருது பெற்றார்.

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு அறம் அன்பின் அடையாளம் அறக்கட்டளை நடத்திய ஆசிரியர்களுக்கான விருது வழங்கும் விழாவில் எங்கள் கல்லூரியின் தமிழ்த்துறை தலைவர் முனைவர் வே.சுலோச்சனா அவர்கள் கல்விச் சுடரொளி விருது பெற்றார்.

